புவி அறிவியல் அமைச்சகம்

இடி, மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில்) கூடிய மழை உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், தில்லி மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் பெய்யக்கூடும்

Posted On: 12 JUN 2021 5:47PM by PIB Chennai

இந்திய வானிலை துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் படி:

(நாள்: 12 ஜூன் 2021, வெளியீட்டு நேரம்: இந்திய நேரப்படி மாலை 4.30 மணி)

 அனைத்திந்திய பாதிப்பு சார்ந்த வானிலை முன்னறிவிப்பு அறிக்கை

12 ஜூன் (நாள் 1): இடி, மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில்) கூடிய மழை உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், தில்லி மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் பெய்யக்கூடும்.

மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில்) கூடிய மழை உத்தரப் பிரதேசம், கேரளா, மாஹே, தெலங்கானாவின் சில பகுதிகளிலும், மின்னலுடன் கூடிய மழை அந்தமான் & நிக்கோபார், கங்கையோர மேற்கு வங்கம், ஜார்கண்ட், பிகார், அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம், திரிபுரா, ஜம்மு & காஷ்மீர், லடாக், கில்கிட்-பால்டிஸ்தான் & முசாஃபர்பாத், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், விதர்பா, சத்திஸ்கர், கொன்கன், கோவா, மராத்வாடா, லட்சத்தீவுகள், கடலோர கர்நாடகா, கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனத்தின் ஒரு சில பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும்.

மேற்கண்ட பகுதிகளில் உள்ள சில இடங்களில் கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும்.

மேற்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில்) மழை பெய்யக்கூடும்.

தென்மேற்கு அரபிக்கடல், மேற்கு மத்திய அரபிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், தெற்கு, மத்திய மற்றும் வடக்கு வங்காள விரிகுடாவிலும், ஆந்திரா-ஒடிசா-மேற்கு வங்க கடலோரப் பகுதிகளிலும் பலத்த காற்று (மணிக்கு 40-50 கி.மீ முதல் 60 கி.மீ வேகம் வரை) வீசக்கூடும்.

மன்னார் வளைகுடாவில் மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும், வடக்கு அரபிக் கடல் மற்றும் குஜராத்-மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளிலும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். இப்பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1726575

 

-----



(Release ID: 1726629) Visitor Counter : 143


Read this release in: English , Urdu , Hindi , Punjabi