அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பம் சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் செலவை குறைக்கும்
प्रविष्टि तिथि:
12 JUN 2021 5:51PM by PIB Chennai
எண்ணெய்த்தன்மை மிக்க கழிவுநீரை சுத்திகரிப்பதற்கான புதிய திறன்மிகு கருவி, வாகன சேவை, உணவு மற்றும் இதர சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் விரைவில் கிடைக்கும்.
குறைந்த வருவாய் பிரிவினர் அதிக விலை கொண்ட சுத்திகரிப்பு தொழில்நுட்பங்களை வாங்க முடியாதென்பதால், பெரும்பாலான கழிவு நீர் சுத்தப்படுத்தப்படாமலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை பின்பற்றாமலும் நீர்நிலைகளில் விடப்படுகின்றன.
இதை தடுக்கும் விதமாக, கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் வேதி பொறியியல் துறை பேராசிரியரான டாக்டர் சிரஞ்சிப் பட்டாச்சார்ஜி, கழிவு நீரை சுத்திகரிப்பதற்கு எலக்ட்ரோகோவாகுலேஷன் மற்றும் எலக்ட்ரோஃப்ளோடேஷன் என்ஹேன்ஸ்டு மெம்ப்ரேன் மாட்யூல் எனும் தொழில்நுட்பங்களை ஒன்றிணைத்து பயன்படுத்துகிறார்.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த அதிக நபர்களோ அல்லது தொழில்நுட்ப அறிவோ தேவையில்லை. இதை பயன்படுத்தி பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெயை பல்வேறு முறைகளில் மீண்டும் பயன்படுத்தலாம். இதன் மூலம், குறைந்த வருவாய் உள்ள நிறுவனங்களுக்கு பெருமளவில் பணம் மிச்சமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1726576
----
(रिलीज़ आईडी: 1726625)
आगंतुक पटल : 311