பாதுகாப்பு அமைச்சகம்
ஸ்ரீநகரில் டிஆர்டிஓ உருவாக்கிய 500 படுக்கைகள் கொண்ட கொவிட் மருத்துவமனை
प्रविष्टि तिथि:
12 JUN 2021 12:31PM by PIB Chennai
ஸ்ரீநகரின் கொன்மோவில் 500 படுக்கைகள் கொண்ட கொவிட் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த மருத்துவமனை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) 17 நாட்களில் குறுகிய காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பி.எம் கேர்ஸ் நிதியத்தால் நிதியளிக்கப்படுகிறது. இதில் கொவிட் நோயாளிகளின் வசதிக்காக, வென்டிலேட்டர்களுடன் 125 அவசர சிகிச்சை படுக்கைகள் உள்ளன. அவற்றில் 25 குழந்தைகளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. 62 கேஎல் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் சேமிப்பு தொட்டிகளில் இருந்து அனைத்து 500 படுக்கைகளுக்கும் தொடர்ச்சியான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகத்தால் இந்த மருத்துவமனை நிர்வகிக்கப்படுகிறது.
நவீன கணினி மென்பொருள் மூலம் சரியான கண்காணிப்பு மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திற்காக வைஃபை, சி.சி.டி.வி மற்றும் ஹெல்ப்லைன் எண்ணைக் கொண்ட கட்டுப்பாட்டு மையம் நிறுவப்பட்டுள்ளது. குளிர் காலநிலை காரணமாக, மருத்துவர்கள், பாரா மருத்துவ ஊழியர்கள், மருந்தக ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் உட்பட 150 பேர் தங்குவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெருந்தொற்று காலத்தில் ஜம்மு-காஷ்மீரின் கொவிட் -19 நோயாளிகளுக்கு இந்த மருத்துவமனை மருத்துவ சேவையை வழங்கும்.
(रिलीज़ आईडी: 1726500)
आगंतुक पटल : 244