சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
புதுப்பிக்கப்பட்ட ஹர்தயாள் நகராட்சி பாரம்பரிய பொது நூலகத்தை தில்லியில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் திறந்து வைத்தார்
प्रविष्टि तिथि:
11 JUN 2021 7:21PM by PIB Chennai
புதுப்பிக்கப்பட்ட ஹர்தயாள் நகராட்சி பாரம்பரிய பொது நூலகத்தை, தில்லியில் உள்ள சாந்தினி சவுக்கில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று திறந்து வைத்தார். அரிய புத்தகங்களை அதிகளவில் தன்னகத்தே கொண்டிருக்கும் நூலகத்தை ஒட்டுமொத்த நாட்டிற்கும் அவர் அர்ப்பணித்தார். ரூ 3 கோடிக்கும் அதிகமான செலவில் இந்த நூலகம் புனரமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 28 நாட்களாக கொவிட் தொற்றுகள் தொடர்ந்து குறைந்து வருவதன் மூலமும், கடந்த 4 நாட்களாக புதிய பாதிப்புகளின் அளவு 1 லட்சத்திற்கும் குறைவாக இருப்பதன் காரணத்தாலும் அவரது தொகுதியை சேர்ந்த மக்களுடன் நேரடியாக தம்மால் இருக்க முடிகிறது என்று டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.
தொற்றுகள் குறைந்து வருவதன் காரணமாக அலட்சியமாக இருக்கக் கூடாதென்றும், முறையான கொவிட் நடத்தைமுறையை தவறாமல் அனைவரும் பின்பற்ற வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். முக கவசங்களை சரியாக அணியாதது போன்றவற்றால் தான் இரண்டாம் அலை ஏற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நூலகத்தில் உள்ள புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்குவது குறித்து பேசிய அவர், டிஜிட்டல் இந்தியா லட்சியத்தை அடைய பிரதமர் திரு நரேந்திர மோடி தொடர்ந்து பாடுபட்டு வருவதாக கூறினார்.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு விரைவில் தடுப்பு மருந்து வழங்குமென்று அமைச்சர் தெரிவித்தார். “தடுப்பூசி உற்பத்தி அதிகரித்து வருவதால், மே மாதத்தை விட ஜூன் மாதத்தில் அதிக தடுப்பு மருந்துகள் கிடைக்கும். உற்பத்தி திறன் அதிகரிக்கப்படுவதால் அனைவருக்கும் போதுமான தடுப்புமருந்து விரைவில் கிடைக்கும்,” என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1726314
*****************
(रिलीज़ आईडी: 1726369)
आगंतुक पटल : 184