புவி அறிவியல் அமைச்சகம்
தெற்கு குஜராத், தெற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளில் மேலும் முன்னேறியது தென்மேற்கு பருவ மழை
Posted On:
11 JUN 2021 5:48PM by PIB Chennai
தெற்கு குஜராத், தெற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை மேலும் முன்னேறியுள்ளதாக தேசிய வானிலைத்துறையின் முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வட அரபிக் கடலின் சில பகுதிகளுக்கும், தெற்கு குஜராத், தெற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கருக்கு தென்மேற்கு பருவமழை இன்று மேலும் முன்னேறியுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, மேற்குவங்கம், ஜார்கண்ட், பீகார், உத்தரப்பிரதேசம், வடக்கு வங்காள விரிகுடாவின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேற வாய்ப்புள்ளது. அடுத்த 3 முதல் 4 நாட்களில் தெற்கு ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் கட்ச் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முன்னேற வாய்ப்புள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1726277
(Release ID: 1726337)
Visitor Counter : 136