கலாசாரத்துறை அமைச்சகம்

விடுதலையின் அம்ரித் மகோத்சவம்: உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் பங்கேற்பு

Posted On: 10 JUN 2021 5:44PM by PIB Chennai

விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர் ஷகீத் ராம் பிரசாத் பிஸ்மில் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவர் பிறந்த ஊரான உத்தரப் பிரதேசம் ஷாஜகான்பூரில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் நாளை (ஜூன் 11) சிறப்பு நிகழ்ச்சியை நடத்துகிறது

உத்தரப் பிரதேசம் ஷாஜகான்பூரில், ஷகீத் உதயன் என்ற இடத்தில், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்யும் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் இத்துறையின் இணையமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் கலந்து கொண்டு ஷகீத் ராம் பிரசாத் பிஸ்மில், ஷகீத் அஷ்பக் உல்லா கான், ஷகீத் ரோஷன் ஆகியோரின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.

பன்டிட் ராம் பிரசாத் பிஸ்மில், உத்தரப் பிரதேசம் ஷாஜகான்பூரில் கடந்த 1897ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி பிறந்தார். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய புரட்சியாளர்களில் இவரும் ஒருவர்இவர் தனது 19ம் வயதில் இருந்து பிஸ்மில் என்ற பெயரில் தேசபக்தி பாடல்களை இந்தி மற்றும் உருது மொழிகளில் எழுதினார். சுதந்திரப் போராட்ட வீரர்கள் பகத் சிங், சந்திரசேகர் ஆசாத் ஆகியோருடன் இணைந்து இந்துஸ்தான் பொது சங்கத்தை இவர் ஏற்படுத்தினார். கடந்த 1925ம் ஆண்டு ககோரி சதி சம்பவத்தில் ஈடுபட்ட காரணத்துக்காக, இவர் 30வது வயதில் கோரக்பூர் சிறையில்  வீரமரணம் அடைந்தார்சிறையில் இருக்கும் போது இவர் எழுதிய இரு தேசபக்தி பாடல்கள், சுதந்திர போராட்டவீரர்களின் கீதமாக மாறியது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725994

----

 



(Release ID: 1726056) Visitor Counter : 174