அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்திய மருத்துவமனைகளுக்கு உள்நாட்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் விநியோகம்

இடுகை இடப்பட்ட நாள்: 09 JUN 2021 3:39PM by PIB Chennai

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. இவை இந்தியாவில் உள்ள மருந்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

சுத்தமான ஆக்ஸிஜன் விநியோகத்தை உறுதி செய்யும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தற்போது சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன.

இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொடக்க நிறுவனம், மலிவான விலையில், பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையிலான ஆக்ஸிஜன் செறிவூட்டியை தயாரித்துள்ளது. இது நாட்டில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

மொஹாலியைச் சேர்ந்த வால்நட் மெடிக்கல் என்ற நிறுவனம் 5 லிட்டர் மற்றும் 10 லிட்டர் அளவில் பிஎஸ்ஏ வகை ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை உருவாக்கியுள்ளது.

இது 55 முதல் 75 கேபிஏ அழுத்தத்தில் 96 சதவீத சுத்தமான ஆக்ஸிஜனை விநியோகிக்கிறது.

இந்த நிறுவனத்துக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்படும் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் வளர்ச்சி வாரியம் ஆதரவு அளிக்கிறது.

இறக்குமதியை குறைப்பதற்காக, ஓராண்டுக்குள் உலகத்தரத்திலான ஆக்ஸிஜன் செறிவூட்டியை இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுக்கான சர்வதேச பாதுகாப்பு தரநிலைப்படி, பாதுகாப்பு அம்சங்களுக்கான சோதனைகள் அனைத்தையும் வால்நட் மெடிக்கல் மருத்துவ ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் முடித்துள்ளன.

பிறநாட்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுடன் போட்டி போடும் விதத்தில், வால்நட் மெடிக்கல் நிறுவனம் உள்நாட்டில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தயாரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் ஆதரவு மிகவும் உதவியது.

கூடுதல் விவரங்களுக்கு:

Siddharth Dhawan Co-Founder, Walnut Medical, can be contacted at (siddharthdhawan20[at]gmail[dot]com ,+91-9650622772).

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725607

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1725686) வருகையாளர் எண்ணிக்கை : 305
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Telugu , Kannada