பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
தேசிய நிதி தகவல் அளித்தல் ஆணைய செயல்பாடு குறித்த ஆலோசனை அறிக்கை மீது பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன
प्रविष्टि तिथि:
08 JUN 2021 7:00PM by PIB Chennai
பல்வேறு முக்கிய பங்குதாரர்களிடம் இருந்து கருத்து செறிவுடன் கூடிய உள்ளீடுகளை வழங்குவதற்காக தொழில்நுட்ப ஆலோசனை குழு ஒன்றை தேசிய நிதி தகவல் அளித்தல் ஆணையம் நிறுவியுள்ளது.
பங்குதாரர்களுடனான தேசிய நிதி தகவல் அளித்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கான ஆலோசனை நடவடிக்கையை மேற்கொண்ட தொழில்நுட்ப ஆலோசனை குழு, அவற்றை மேம்படுத்துவதற்கன வழிகளை பரிந்துரைக்கும் அறிக்கையை 2021 மார்ச் மாதம் சமர்ப்பித்தது.
அறிவுரை/ஆலோசனைகள் குழுக்களை உருவாக்குவது, ஆராய்ச்சி திட்டங்களை நிறுவுவது, தேசிய நிதி தகவல் அளித்தல் ஆணையத்தின் ஆய்வு கொள்கையை வெளியிடுவது மற்றும் தேசிய நிதி தகவல் அளித்தல் ஆணையத்தின் ஒழுங்குமுறை திறனை கட்டமைப்பது ஆகியவை முக்கிய பரிந்துரைகள் ஆகும்.
தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் மதிப்பு மிகுந்த பங்களிப்பை அங்கீகரித்துள்ள தேசிய நிதி தகவல் அளித்தல் ஆணையம், இது குறித்த ஆலோசனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. https://www.nfra.gov.in/consultation_papers எனும் இணைப்பில் இது கிடைக்கும்.
இது குறித்து பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கடைசி தேதி 2021 ஜூலை 10 ஆகும். comments-tac.paper @nfra.gov.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கருத்துகளை அனுப்பலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725395
*****************
(रिलीज़ आईडी: 1725413)
आगंतुक पटल : 309