எரிசக்தி அமைச்சகம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகரிக்க இந்தியா உறுதி

Posted On: 07 JUN 2021 4:58PM by PIB Chennai

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சான்றிதழுக்கான (ஆர்இசிமுறையை மாற்றியமைப்பது சம்பந்தமான ஆலோசனை அறிக்கை குறித்து மின்துறையை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கும்படி மின்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மின்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஏற்ப, புதிய புதுப்பிக்கத்தக்க தொழில்நுட்பத்தை மேம்படுத்த, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சான்றிதழுக்கான(REC)  முறையை மாற்றியமைப்பது குறித்த ஆலோசனை  அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆர்இசி முறையில் தெரிவிக்கப்பட்டுள்ள மாற்றங்களின் முக்கிய அம்சங்கள்:

1. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சான்றிதழின் செல்லுபடி காலம் அகற்றப்படலாம். இதன் மூலம் இது விற்கப்படும் வரை இதன் செல்லுபடி காலம் இருக்கும்

2. ஆர்இசிக்கான காலம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்குபவர்களுக்கு வழங்கப்படும்: ஆர்இசிக்கு தகுதியான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளர், திட்டம் தொடங்கப்பட்ட தேதியிலிருந்து 15 ஆண்டுகளுக்கு ஆர்இசி வழங்க தகுதி உள்ளது. ஆர்இசிக்கு தகுதியான தற்போதுள்ள புதுப்பக்கத்தக்க எரிசக்தி திட்டம், தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு ஆர்இசி பெறும்.

3.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் புதிய தொழில்நுட்பங்கள்  மற்றும் ஆர்இசி வழங்கும் வசதிகள் ஊக்குவிக்கப்படும்.

4. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.

5. சலுகை விலையில் எந்த ஆர்இசியும் வழங்கப்படாது.

6. ஆர்இசி வர்த்தகத்தில் வர்த்தகரின் பங்கு அதிகரிக்கப்படும். இதன் மூலம் புதிய முன்னேற்றங்கள் ஏற்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725078

 

------


(Release ID: 1725153) Visitor Counter : 185


Read this release in: English , Urdu , Hindi , Punjabi