புவி அறிவியல் அமைச்சகம்

நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு அனல் காற்று வீசாது: வானிலைத் துறை தகவல்

Posted On: 07 JUN 2021 4:28PM by PIB Chennai

நாட்டின் எந்த பகுதியிலும்  அடுத்த 5 நாட்களுக்கு அனல் காற்று இருக்காது என இந்திய வானிலைத் துறையின், முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளதுஅதன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 மேற்கு ராஜஸ்தான், விதர்பா, உள்ளிட்ட சில இடங்களில்  அதிகபட்ச வெப்ப நிலையாக 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. ஒடிசாவின் திதலாகர் பகுதியில் நேற்று மிக அதிகமாக 42.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது.

ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட சில இடங்களில் குறைந்த பட்ச வெப்ப நிலை 3.1 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

நாட்டின் எந்த பகுதியிலும் அடுத்த 5 நாட்களுக்கு அனல் காற்று வீச வாய்ப்பில்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725064

 

----


(Release ID: 1725143) Visitor Counter : 178
Read this release in: English , Urdu , Hindi , Punjabi