பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஜம்மு ஹிராநகரில் கட்டப்படும் அருண் ஜெட்லி மனமகிழ் மற்றும் விளையாட்டு வளாக பணிகளை மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் ஆய்வு செய்தார்

प्रविष्टि तिथि: 06 JUN 2021 7:05PM by PIB Chennai

ஜம்மு ஹிராநகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் அருண் ஜெட்லி பல்நோக்கு வளாக பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளை மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கேட்டுக் கொண்டார்.

அகமதாபாத், கொல்கத்தா ஈடன் கார்டன் ஆகிய விளையாட்டு வளாகங்களுக்கு  அடுத்ததாக மிகப் பெரிய மனமகிழ் மற்றும் விளையாட்டு வளாகங்களில் ஒன்றாக இது இருக்கும்.

இந்த வளாகம் கட்டப்படும் இடத்துக்கு இன்று சென்ற மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங், தேவையான நடவடிக்கைகளை விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினார்.

இங்கு நடைபெறும் முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவ்வப்போது கேட்டறிவேன் என அவர் கூறினார்

இந்தத் திட்டம் நாட்டின் இளைஞர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும், மறைந்த திரு. அருண் ஜெட்லி நினைவாக உருவாக்கப்படுவதாகவும், டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார்.

மத்திய அரசின் நிதியுதவியுடன் இந்த மையம் 37 ஏக்கர் நிலத்தில் கட்டப்படுகிறது. இத்திட்டம் நிறைவடைந்தவுடன், இங்கு நடக்கவுள்ள நிகழ்ச்சிகள் மூலம், ஹிராநகர் மட்டும் அல்ல, ஒட்டு மொத்த ஜம்மு காஷ்மீரும், இந்திய வரைபடத்தில், சர்வதேச தளமாக இடம்பெறும் என டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724963

-----


(रिलीज़ आईडी: 1724983) आगंतुक पटल : 272
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi