அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கொவிட்-19 சிகிச்சைக்கு மாற்றியமைக்கப்பட்ட நிக்லோசமைடு மருந்து பரிசோதனை: சிஎஸ்ஐஆர் இந்தியா மற்றும் லக்சை லைப் சயின்சஸ் தொடக்கம்
Posted On:
06 JUN 2021 2:02PM by PIB Chennai
கொவிட்-19 சிசிக்சைக்கு ஒட்டுண்ணி தடுப்பு மருந்தான நிக்லோசமைடு-ன் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனையை அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில்(சிஎஸ்ஐஆர்), லக்சை லைப் சயின்ஸஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கியுள்ளது.
இதற்கு முன்பாக வயது வந்தோர் மற்றும் குழந்தைகளுக்கு நாடாப்புழு பாதிப்பு ஏற்படும் போது, அதற்கான சிகிச்சைக்கு நிக்லோசமைடு மருந்து பரவலாக பயன்படுத்தப்பட்டது.
இந்த மருந்தின் பாதுகாப்புத்தன்மை பலமுறை பரிசோதிக்கப்பட்டு, மனிதர்கள் எடுத்துக் கொள்வதற்கு பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குனர் டாக்டர் சேகர் சி மாண்டே கூறுகையில், ‘‘நிக்லோசமைடு மருந்தின் இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மருந்து இந்தியாவில் எளிதில் கிடைக்கும் பொதுவான மருந்து என்பதால், இதை மக்களுக்கு கிடைக்கச் செய்ய முடியும்’’ என்றார்.
லக்சாய் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ராம் உபாத்யாயா கூறுகையில், ‘‘நிக்லோசைமைடு மருந்தின் திறனை உணர்ந்து, அதை பரிசோதிக்கும் முயற்சிகள் கடந்தாண்டே மேற்கொள்ளப்பட்டன. மருந்து ஒருங்குமுறை அமைப்பிடம் இருந்து அனுமதி பெற்றபின்பு, இந்த மருத்துவ பரிசோதனை பல இடங்களில் இந்த வாரம் தொடங்கப்பட்டுள்ளது. 8 முதல் 12 வாரங்களுக்குள் இந்த பரிசோதனை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரிசோதனையின் வெற்றியின் அடிப்படையில், இதை அவசரகாலத்தில் பயன்படுத்துவதற்கான அனுமதி கோரப்படும். இதன் மூலம் கொவிட்-19 நோயாளிகளுக்கு பல சிகிச்சை முறைகள் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724905
------
(Release ID: 1724926)
Visitor Counter : 259