பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

தமது உதம்பூர்-கத்துவா-தோடா மக்களவை தொகுதியில் கொவிட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரூ 10 லட்சத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வழங்கினார்

प्रविष्टि तिथि: 05 JUN 2021 6:06PM by PIB Chennai

தமது உதம்பூர்-கத்துவா-தோடா மக்களவை தொகுதியில் கொவிட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரூ 10 லட்சத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று வழங்கினார். தன்னார்வ/தனிப்பட்ட ஆதாரங்களின் மூலம் இந்த தொகை திரட்டப்பட்டது. தொகுதியில் உள்ள ஆறு மாவட்டங்களின் மைய அதிகாரியான கத்துவா துணை ஆணையர் திரு ராகுல் யாதவ் காசோலையை பெற்றுக் கொண்டார்.

குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவரை பெருந்தொற்றுக்கு பறி கொடுத்த குழந்தைகளை தமது கத்துவா பயணத்தின் போது சந்தித்த டாக்டர் ஜிதேந்திர சிங், அவர்களது இழப்பு ஈடு செய்யவே முடியாத ஒன்றாக இருக்கும் போதிலும், நம்மால் முடிந்தளவு உதவிபுரிந்து இக்குழந்தைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

இந்த தொகையானது இத்தகைய குழந்தைகளுக்கு உதவுவதற்கான சிறிய மற்றும் தன்னார்வ பங்களிப்பு என்ற போதிலும், இன்னும் அதிகளவில் அவர்களுக்கு உதவ தாம் தொடர்ந்து முயற்சித்து வருவதாக அமைச்சர் கூறினார்.

இத்தகைய குழந்தைகளுக்கு குறிப்பிடத்தகுந்த அளவு நிதி ஆதரவளிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி முன்வந்திருப்பதை குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், இதுவரை இல்லாத பெருந்தொற்றின் போது நம்மால் முடிந்த உதவியை அளிப்பதற்கு பிரதமரின் செயல் ஊக்கமளிப்பதாக கூறினார். 

நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கொவிட் பராமரிப்பு வசதிகளை வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ 2.5 கோடியை டாக்டர் ஜிதேந்திர சிங் ஏற்கனவே வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ 2.1 கோடி மதிப்பிலான கொவிட் தொடர்புடைய பொருட்களின் கொள்முதல் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கத்துவா சென்றடைந்தவுடன் சமீபத்தில் காலமான 101 வயதான ஜன சங்க தலைவர் திரு சவுத்ரி சாகர் சிங்கின் இல்லத்திற்கு முதலில் சென்ற டாக்டர் ஜிதேந்திர சிங், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1724738

*****************


(रिलीज़ आईडी: 1724786) आगंतुक पटल : 274
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu