புவி அறிவியல் அமைச்சகம்
அரபிக் கடல், மத்திய வங்காள விரிகுடாவின் பல பகுதிகள் மற்றும் வடகிழக்கு வங்காள விரிகுடாவின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேற்றமடைந்துள்ளது
प्रविष्टि तिथि:
05 JUN 2021 5:59PM by PIB Chennai
இந்திய வானிலை துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் படி: (2021 ஜூன் 5, சனிக்கிழமை, இந்திய நேரப்படி மாலை 4.30 மணி அளவில்; பிற்பகல் 2.30 மணி பதிவுகளின் அடிப்படையில்)
அனைத்திந்திய வானிலை கணிப்பு (மாலை)
* அரபிக் கடலின் பல பகுதிகள், ஒட்டுமொத்த கடலோர கர்நாடகா, கோவா, மகாராஷ்டிராவின் சில பகுதிகள், வடக்கு உட்புற கர்நாடகாவின் பல பகுதிகள், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகள், தமிழ்நாட்டின் பல பகுதிகள், மத்திய வங்கக் கடலின் பல பகுதிகள் மற்றும் வட தெற்கு வங்கக் கடலின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்று (2021 ஜூன் 5) மேலும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
* மத்திய அரபிக் கடலின் பல பகுதிகள், மகாராஷ்டிராவில் இன்னும் சில பகுதிகள், கர்நாடகாவில் மிச்சமுள்ள பகுதிகள், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் பல பகுதிகள், தமிழகத்தின் மிச்சப் பகுதிகள், மத்திய மற்றும் வடகிழக்கு வங்காள விரிகுடாவின் அதிக பகுதிகள், வடகிழக்கு வங்காள விரிகுடாவின் சில பகுதிகள் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேற்றமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* கிழக்கு மத்திய அரபிக் கடல் மீது புயல் சுழற்சியின் காரணமாக தென் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் கடல் மட்டத்திற்கு 0.9 கி.மீ மேல் உருவாகியுள்ள தாழ்வு நிலை நீடிக்கிறது.
* தெற்கு மகாராஷ்டிராவில் இருந்து தென் கேரள கடற்கரை வரையிலான கடல் மட்டத்தில் உருவாகியுள்ள தாழ்வு நிலை நீடிக்கிறது
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1724735
*****************
(रिलीज़ आईडी: 1724783)
आगंतुक पटल : 132