புவி அறிவியல் அமைச்சகம்

அடுத்த 5 நாட்களுக்கு நாட்டில் வெப்ப அலை இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது

Posted On: 05 JUN 2021 4:46PM by PIB Chennai

இந்திய வானிலை துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் படி: (2021 ஜூன் 5, இந்திய நேரப்படி மாலை 4 மணி அளவில்)

தற்போதைய வெப்பநிலை மற்றும் எச்சரிக்கை

நேற்றைய அதிகபட்ச வெப்பநிலை: வெப்ப அலை: இல்லை

அதிகபட்ச வெப்பநிலை: மேற்கு ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும், கிழக்கு ராஜஸ்தான், ஹரியானா, சவுராஷ்டிரா, கட்ச் மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளிலும் 40.0°சி-க்கும் அதிகமாக அதிகபட்ச வெப்பநிலை இருந்தது.

நேற்று நாட்டிலேயே அதிகபட்சமாக பண்டாவில் (கிழக்கு உத்தரப் பிரதேசம்) 43.2°சி பதிவானது.

இன்றைய குறைந்தபட்ச வெப்பநிலை: இரவில் வெப்பம்: இல்லை

குறைந்தபட்ச வெப்பநிலை: ஜம்மு காஷ்மீர், லடாக், கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் முசாஃபர்பாத்தில் சராசரிக்கும் அதிகமாகவும் (3.1°சி to 5.0°சி வரை), ஒடிசாவின் சில பகுதிகள் மற்றும் மேற்கு வங்கம், சிக்கிம் மற்றும் லட்சத்தீவுகளின் சில பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமாகவும் (1.6°சி to 3.0°சி வரை) இருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1724705

*****************



(Release ID: 1724751) Visitor Counter : 177


Read this release in: English , Urdu , Hindi , Punjabi