அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் நடைபெறும் பருவநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சி வலுப்படுத்தப்படுகிறது
Posted On:
04 JUN 2021 6:06PM by PIB Chennai
பருவநிலை மாற்றம் நாட்டில் ஏற்படுத்தி வரும் பாதிப்பு, இந்த சர்வதேச சிக்கலை எதிர்கொள்வதற்கான புதிய வழிகள், எதிர்காலத்தை நோக்கி நாட்டை தயார்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து நாடு முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சிக்கிமில் இருக்கும் சிறிய பனிப்பாறைகள் இதர இமாலயப் பகுதிகளுடன் ஒப்பிடும் போது வேகமாக உருகி வருவதாக டேராடூனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இமாலய புவியியலுக்கான வாடியா நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்தியுள்ள இந்த ஆய்வு ‘சயின்ஸ்’ சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.
வேளாண் கழிவுகளை எரித்தல் மற்றும் காட்டுத் தீ ஆகியவை கங்கோத்ரி பனிப்பாறைகளின் உருகலுக்கு பங்காற்றி இருக்கக் கூடும் என்றும் இதே நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தோ-காஞ்ஜெடிக் நிலப்பரப்பை உலகின் மிகவும் மாசடைந்த பகுதிகளில் ஒன்றாக கருப்பு கரிபொருள் மற்றும் தூசு ஆக்கியிருப்பதாக ஐஐடி கான்பூரை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் காரணமாக இமயமலை அடிவாரத்தில் அதிகளவில் மழை பெய்வதாகவும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் நடைபெறும் மற்றொரு ஆராய்ச்சியில், இந்திய பொருளாதாரம் பெரிதும் நம்பியிருக்கும் பருவமழையை வடக்கு அட்லாண்டிக் பகுதியில் இருந்து வரும் கோள்கள் சார்ந்த அலை பாதிக்கக்கூடும் என்று ஐஐஎஸ்சி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் நடைபெறும் இந்த ஆய்வுகள் மற்றும் திறன் வளர்த்தல் நடவடிக்கைகள் பருவநிலை மாற்றம் குறித்த நாட்டின் நிபுணத்துவத்தை வலுப்படுத்த உதவியுள்ளன.
-----
(Release ID: 1724586)
Visitor Counter : 281