வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

நாகாலாந்துக்கான நிவாரணப் பொருட்களை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பெற்றுக் கொண்டார்

Posted On: 04 JUN 2021 6:04PM by PIB Chennai

லோக் நாயக் பவனில் ஓய்வூதியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறையால் நாளை நடத்தப்படும் சிறப்பு முகாமில் அனைத்து அலுவலர்கள் மற்றும் தகுதியுடைய அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தடுப்புமருந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான திரு ஜிதேந்திர சிங் கூறினார். வரும் வாரங்களில் இது போன்ற முகாம்கள் அதிகளவில் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கொவிட்-19 இரண்டாம் அலையின் போது துறையின் குறைதீர்ப்பு செயல்முறையின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த அமைச்சர், அதன் தரம் குறித்து திருப்தி தெரிவித்தார்.

இதற்கிடையே, நாகாலாந்தில் விநியோகிக்கப்படுவதற்கான கொவிட் நிவாரணப் பொருட்களை பல்வேறு தொண்டு நிறுவனங்களிடம் இருந்து அமைச்சர் இன்று பெற்றுக் கொண்டார்.

சேவா இன்டெர்நேஷனல் மற்றும் யுசி பெர்க்லி ஆகிய அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட நிவாரணப் பொருட்களை வட கிழக்கு மாகாண வளர்ச்சி அமைச்சகம் கிழக்கு நாகாலாந்தில் உள்ள 4 பின்தங்கிய மாவட்டங்களில் விநியோகிக்கும்.

சேவா இன்டெர்நேஷனல் மற்றும் யுசி பெர்க்லியுடன் இணைந்து 25 நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் நிவாரணப் பொருட்களை சேகரித்து வருவதாக தெரிவித்த அமைச்சர், இதன் மூலம் இந்தியர்களின் ஒற்றுமையை அவர்கள் வெளிப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724466----

 


(Release ID: 1724572) Visitor Counter : 194


Read this release in: English , Urdu , Hindi