எரிசக்தி அமைச்சகம்

பணியாளர்களுக்கான தடுப்பு மருந்து முகாம்களை பவர்கிரிட் ஏற்பாடு செய்தது

Posted On: 03 JUN 2021 4:01PM by PIB Chennai

இந்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மகாரத்னா பொதுத்துறை நிறுவனமாக பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் விளங்குகிறது.

தற்போதைய பெருந்தொற்றின் போது, உயிர்களைக் காப்பாற்றுவதற்கு தேவையான மிகவும் முக்கியமான ஆயுதமாக தடுப்பு மருந்து திகழ்கிறது. தனது பணியாளர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்குமான தடுப்பு மருந்து வழங்கும் முகாம்களை நாடு முழுவதும் உள்ள தனது மையங்களில் பவர்கிரிட் நடத்தி வருகிறது.

இவற்றின் தொடர்ச்சியாக, மேற்கு பகுதி இரண்டில் உள்ள பூஜ்-2 துணை மின் நிலையத்தில் (குஜராத்), தடுப்பு மருந்து முகாம் ஒன்றுக்கு பவர்கிரிட் ஏற்பாடு செய்தது. இதன் மூலம், பவர்கிரிட் பணியாளர்கள், டிரான்ஸ்ரயில் பணியாளர்கள், கேஈசி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 244 பேர் பயன் அடைந்தனர்.

இதே போன்றதொரு முகாம் (மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே) ஷிக்ராப்பூரில் 2021 ஜூன் 2 அன்று நடத்தப்பட்டது. இதன் மூலம் 140 பணியாளர்கள் பயன்பெற்றனர். மேற்கு பகுதி ஒன்றின் துணை மின் நிலையங்களிலும் தடுப்பூசி வழங்கும் முகாம்கள் நடைபெற்றன.

கிழக்கு பகுதி ஒன்றில் உள்ள சீதாமர்ஹி துணை மின் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட முகாமில் 71 பேர் தடுப்பு மருந்தை பெற்றனர். பணியாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்துள்ளோரின் நலன் கருதி வடக்கு பகுதி மூன்றில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஆக்ரா (உத்தரப் பிரதேசம்) துணை மின் நிலையம் தடுப்பு மருந்து முகாமுக்கு ஏற்பாடு செய்தது. இந்த முகாமில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது.

*****************



(Release ID: 1724123) Visitor Counter : 115