உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
சத்தீஸ்கரில் பிரம்மாண்ட உணவுப் பூங்கா: காணொலி வாயிலாக மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் திறந்து வைப்பு
Posted On:
03 JUN 2021 2:45PM by PIB Chennai
மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்டஸ் பெஸ்ட் பிரம்மாண்ட உணவுப் பூங்காவை காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணை அமைச்சர் திரு ரமேஷ்வர் தெளி, சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் திரு பூபேஷ் பாகல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு தோமர், மதிப்புக்கூட்டல், வேளாண் பொருட்களை நீண்ட நாட்கள் சேமிப்பதற்கான வசதி, விவசாயிகளுக்கு அதிக வருவாய், தலை சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் இந்தப் பகுதியின் விவசாயிகளுக்கு சந்தைப்படுத்துவதற்கான மாற்று முறைகள் போன்றவற்றை இந்த உணவுப் பூங்கா உறுதி செய்யும் என்று கூறினார்.
இந்தப் பூங்காவின் மூலம் சுமார் 5000 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதுடன் 25000 விவசாயிகளும் பயனடைவார்கள்.
உணவு பதப்படுத்துதலுக்காக இந்தப் பூங்காவில் உருவாக்கப்பட்டுள்ள நவீன உள்கட்டமைப்பு வசதிகளால் சத்தீஸ்கர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த உணவுப் பதப்படுத்துபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பயனடைவதுடன், சத்தீஸ்கர் மாநிலத்தின் உணவு பதப்படுத்துதல் துறையின் வளர்ச்சியும் அதிகரிக்கும் என்றும் திரு தோமர் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் திரு ரமேஷ்வர் தெளி, நவீன உள்கட்டமைப்பு மற்றும் பதப்படுத்துதல் வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட உணவுப் பூங்காவினால் வேளாண் பொருட்கள் வீணாவது குறைவதோடு மதிப்புக் கூட்டலும் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
விவசாயிகள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் குறு தொழில்முனைவோர், பதப்படுத்தும் பணியை தொடங்கவும் இந்தப் பூங்காவின் நீர்பிடிப்புப் பகுதிகளில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்தத் திட்டம் வழிவகுக்கும். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்படைவதுடன், சத்தீஸ்கர் மாநிலத்தில் கூடுதல் முதலீடுகளும் ஏற்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724026
*****************
(Release ID: 1724094)