மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

தடுப்பு மருந்து நிலைத் தகவல் குறித்து பதிவேற்றம் செய்வதற்கான புதிய வசதியை ஆரோக்கிய சேது செயலி அறிமுகப்படுத்தியுள்ளது

Posted On: 01 JUN 2021 7:15PM by PIB Chennai

தடுப்பு மருந்து நிலைத் தகவல் குறித்து பதிவேற்றம் செய்வதற்கான புதிய வசதியை ஆரோக்கிய சேது செயலி அறிமுகப்படுத்தியுள்ளது.

தானே எப்படி பதிவேற்றம் செய்வது:

தடுப்பு மருந்தின் முதல் டோசை பெற்றவர்களுடைய ஆரோக்கிய சேது செயலியின் முகப்பு பக்கத்தில் 1 நீல நிற டிக் குறி தோன்றும்.

தடுப்பு மருந்தை முழுமையாக பெற்றவர்களுடைய ஆரோக்கிய சேது செயலியின் முகப்பு பக்கத்தில் 2 நீல நிற டிக் குறிகள் தோன்றும். தடுப்பூசி பெற்றுக் கொண்டதை கோவின் தல மூலம் சரிபார்த்த பிறகு இரண்டாம் டோஸ் பெற்று 14 நாட்களுக்கு பின்னர் இது தோன்றும். நீல நிற கவசமும் தோன்றும்.

மாற்றி அமைக்கப்பட்ட சுய மதிப்பீட்டை செய்யாத அனைத்து ஆரோக்கிய சேது பயனர்களுக்கும் தடுப்புமருந்து நிலையை பதிவேற்றவும் என்ற விருப்பத்தேர்வு வழங்கப்படும்.  ஆரோக்கிய சேது செயலியில் சுயமதிப்பீடு செய்து கொண்டபிறகு, ஒரு டோஸ் தடுப்பு மருந்து பெற்றவர்களுக்கு, ஓரளவு "தடுப்பு மருந்து பெற்றுள்ளார் / தடுப்பு மருந்து பெற்றுள்ளார் (சரி பார்க்கப்படவில்லை)" என்று அவர்களது ஆரோக்கிய சேது செயலியின் முகப்பு பக்கத்தில் தோன்றும்.

சுய மதிப்பீட்டின் போது பயனர் அளித்த தடுப்பு மருந்து பெற்றுக்கொண்ட நிலை குறித்த தகவலின் அடிப்படையில் இது தோன்றும். சரி பார்க்கப்படாத இந்த நிலை, கோவின் தளத்தில் சரிபார்க்கப்பட்ட பின்னர் ஒருமுறை கடவுச் சொல்லின் அடிப்படையில் சரி பார்த்ததாக அறிவிக்கப்படும். 

கோவின் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட கைபேசியின் மூலம் தடுப்பு மருந்து பெற்றுக்கொண்ட நிலை பதிவேற்றம் செய்யப்படலாம். இதன் மூலம் பயணம் மற்றும் பல்வேறு இடங்களுக்கு செல்ல தேவையான தடுப்பு மருந்து நிலையை எளிதாக சரி பார்க்கலாம்.

*****************



(Release ID: 1723538) Visitor Counter : 439


Read this release in: English , Urdu , Hindi , Punjabi