பாதுகாப்பு அமைச்சகம்
கடற்படை திட்டங்களின் தலைமை இயக்குநராக (விசாகப்பட்டினம்) துணை அட்மிரல் ஸ்ரீகுமார் நாயர் பொறுப்பேற்றார்
Posted On:
01 JUN 2021 4:58PM by PIB Chennai
கடற்படை திட்டங்களின் தலைமை இயக்குநராக (விசாகப்பட்டினம்) துணை அட்மிரல் ஸ்ரீகுமார் நாயர், ஏவிஎஸ்எம், என்எம், பொறுப்பேற்றார். துணை அட்மிரல் கிரன் தேஷ்முக், ஏவிஎஸ்எம், என்எம்மிடம் இருந்து இப்பதவியை அவர் ஏற்றுக்கொண்டார்.
விசாகப்பட்டினம் கடற்படை கப்பல்துறையின் அட்மிரல் கண்காணிப்பாளராகவும், பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த தலைமையகத்தில் (கடற்படை) பொருட்களுக்கான (தகவல் தொழில்நுட்பம் மற்றும் சிஸ்டம்ஸ்) துணை தலைவராகவும் இதற்கு முன் துணை அட்மிரல் ஸ்ரீகுமார் நாயர் பதவி வகித்துள்ளார்.
1987 ஆகஸ்டு 17 அன்று இந்திய கடற்படையின் மின்சாரப் பிரிவில் அலுவலராக இணைந்த துணை அட்மிரல் நாயர், பிராந்திய பொறியியல் கல்லூரி, (தற்போது என்ஐடி), திருச்சிராப்பள்ளி மற்றும் ஐஐடி-தில்லியில் படித்துள்ளார். இந்திய கடற்படையில் பல்வேறு முக்கிய பதவிகளை இவர் வகித்துள்ளார். பல்வேறு கப்பல்களில் பணியாற்றியுள்ளார்.
தனது சிறப்பான சேவைக்காக நவோ சேனா பதக்கத்தை 2010-ம் ஆண்டிலும், அதி விசிஷ்ட் சேவா பதக்கத்தை 2021-லும் இவர் பெற்றுள்ளார்.
******************
(Release ID: 1723483)
Visitor Counter : 223