நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

நடப்பாண்டில் கோதுமை கொள்முதல் 13 சதவீதம் அதிகம்

இடுகை இடப்பட்ட நாள்: 31 MAY 2021 6:30PM by PIB Chennai

நாட்டின் கோதுமை கொள்முதல் கடந்தாண்டு இதே கால கொள்முதலை விட 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

தற்போதைய ராபி சந்தைப் பருவத்தில் கோதுமை கொள்முதல் சுமூகமாக நடைபெறுகிறது. வட மாநிலங்களில் நேற்று வரை 406.7 லட்சம் மெட்ரிக் டன்  கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது வரை நடைப்பெற்ற கொள்முதலில் இது மிக அதிக அளவாகும். 2020-21ம் ஆண்டு ராபி சந்தை பருவத்தில் அதிகபட்ச அளவாக  389.92 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது.

கடந்தாண்டு இதே காலத்தில் 350.28 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. தற்போதை ராபி சந்தை பருவத்தில் 43.55 லட்சம் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.80,334.56 கோடி பெற்றனர்.

தற்போதை காரிப் பருவத்தில் நெல் கொள்முதலும் சுமூகமாக நடக்கிறது. நெல் கொள்முதல் செய்யப்படும் மாநிலங்களில் நேற்று வரை 787.87 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. கடந்தாண்டு இதே காலத்தில் 721.25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. சுமார் 117.04 லட்சம் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.1,48,750.89 கோடி பெற்றுள்ளனர். நெல் கொள்முதலும், இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

2019-20ம் ஆண்டு காரிப் சந்தை பருவத்தில் அதிகபட்ச கொள்முதல் அளவான 773.45 லட்சம் மெட்ரிக் டன்னை மிஞ்சி விட்டது.

மாநிலங்கள் தெரிவித்த விருப்பத்தின் படி 107.81 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று வரை, 7,14,695.80 மெட்ரிக் டன், பாசி பயறு, உளுந்து, துவரை, மைசூர் பருப்பு, நிலக்கடலை, கடுகு மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக  பல மாநிலங்களைச் சேர்ந்த 4,25,585 விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 3,741.39 கோடி பெற்றுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723182

-----

 


(வெளியீட்டு அடையாள எண்: 1723262) வருகையாளர் எண்ணிக்கை : 188
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi