புவி அறிவியல் அமைச்சகம்
நாட்டில் எங்கும் அனல் காற்று வீச வாய்ப்பில்லை: தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் தகவல்
இடுகை இடப்பட்ட நாள்:
31 MAY 2021 5:37PM by PIB Chennai
நாட்டில் எங்கும் அனல் காற்று வீச வாய்ப்பில்லை என தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் நேற்று அனல் காற்று வீசியது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உட்பட நாட்டின் பல பகுதிகளில் நேற்று 40 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்ப நிலை பதிவாகியது.
அதிகபட்சமாக மேற்கு ராஜஸ்தானின் சுரு பகுதியில் 45.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. நாட்டின் எந்த பகுதியிலும் இன்று அனல் காற்று வீச வாய்ப்பில்லை எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723156
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1723245)
வருகையாளர் எண்ணிக்கை : 190