அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

மனித மூளையின் செயல்திறனை பிரதிபலிக்கும் புதிய செயற்கை சினேப்டிக் இணைப்பு உருவாக்கம்

Posted On: 31 MAY 2021 4:38PM by PIB Chennai

மனித மூளையின் அறிவார்ந்த செயல்களை பிரதிபலிக்கும் வகையிலும் செயற்கை நுண்ணறிவில் மேம்பட்டதுமான கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

நரம்பிழை, சிறுநரம்பிழை அடங்கிய லட்சக்கணக்கான நரம்பணுக்கள் மனித மூளையில் உள்ளன. நரம்பிழை, சிறுநரம்பிழைகளின் வாயிலான மரபணுக்களின் பிரம்மாண்ட இணைப்பு சினேப்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த சவாலான உயிரி-நரம்பு சார்ந்த இணைப்பு பல்வேறு அறிவு சார்ந்த ஆற்றல்களுக்கு வழிவகுப்பதாக நம்பப்படுகிறது.

மொத்த உடல் ஆற்றலில் மனித மூளை 20 சதவீதத்தை, அதாவது 20 வாட்ஸை பயன்படுத்துவதாக மதிப்பீடு செய்யப்படுகிறது. தற்போது உள்ள கணினி சார்ந்த தளங்கள் மனித மூளையின் செயல்திறனை பிரதிபலிப்பதில் சுமார் 10 லட்சம் வாட்ஸ் சக்தியை பயன்படுத்துகிறது.

இந்த சவாலை எதிர் கொள்வதற்காக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் பெங்களூருவைச் சேர்ந்த ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் ஓர் புதிய கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். உயிரி நரம்பு இணைப்பைப் போன்ற செயற்கை சினேப்டிக் இணைப்பை உருவாக்கும் புதிய அணுகுமுறையோடு இந்தக் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. ‘மெட்டீரியல்ஸ் ஹாரிசன்ஸ்என்ற சஞ்சிகையில் இந்த படைப்பு அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

வெளியீட்டின் இணைப்பு:

https://doi.org/10.1039/D0MH01037E

கூடுதல் தகவல்களுக்கு பேராசிரியர் ஜி யூ குல்கர்னி(kulkarni@jncasr.ac.) திரு பரத் (bharathdhb[at]gmail[dot]com)  தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723138

 

****



(Release ID: 1723215) Visitor Counter : 179