மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

குளிர் சாதன வசதி மூலம் கொண்டு செல்லப்படும் பொருட்களின் வெப்பநிலையை கண்காணிக்கும் கருவி ‘ஆம்பி டேக்’-ஐ உருவாக்கியுள்ளது ரோபர் ஐஐடி

Posted On: 31 MAY 2021 4:15PM by PIB Chennai

குளிர் சாதனங்களில் கொண்டு செல்லப்படும் பொருட்களின் வெப்பநிலையை கண்காணிக்கும்ஆம்பிடேக்’ (AmbiTag ) என்ற கருவியை பஞ்சாப்பில் உள்ள ரோபர்  ஐஐடி உருவாக்கியுள்ளது.

பஞ்சாப்பில் உள்ள ரோபர் ஐஐடி, உள்நாட்டு தொழில்நுட்பத்தில்ஆம்பிடேக்என்ற கருவியை உருவாக்கியுள்ளது.

இதன் மூலம்  குளிர்சாதனங்களில்  தடுப்பூசி, ரத்தம், உடல் உறுப்புகள் போன்ற அழியக்கூடிய பொருட்களை  கொண்டு செல்லும் போது, அவற்றின் நிகழ்நேர வெப்பநிலையை கண்காணிக்க முடியும். இந்த தகவல் கொவிட்-19 தடுப்பூசிகளை கொண்டு செல்வதற்கும் மிக முக்கியமானது.

யுஎஸ்பி கருவி போல இருக்கும் இந்தஆம்பிடேக்கருவியை ஒரு முறை சார்ஜ் செய்தால், 90 நாட்களுக்குமைனஸ் 40 டிகிரி முதல் பிளஸ் 80 டிகிரி வரை வெப்பநிலை அளவீடுகளை காட்டும்சர்வதேச சந்தையில் கிடைக்கும் இதே போன்ற கருவிகள் 30 முதல் 60 நாட்களுக்கு மட்டுமே வெப்பநிலையை பதிவு செய்யும் என அவாத் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுமன் குமார் கூறுகிறார். .

ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும்போது, இது எச்சரிக்கை விடுக்கும். இதை கம்ப்யூட்டரில் பொருத்தி தகவல்களை பெற முடியும்

குளிர்சாதன வசதியுடன் கொண்டு செல்லப்படும் காய்கறி, பழங்கள், மாமிசம், பால் பொருட்கள் ஆகியவற்றின் வெப்பநிலையையும், இந்த ஆம்பிடேக் மூலம் கண்காணிக்க முடியும்.

கொவிட் தடுப்பூசிகளை கொண்டு செல்லும் அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த கருவி வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் தடுப்பூசிகளின் வெப்பநிலையை உற்பத்தி செய்யும் இடத்தில் இருந்து அவைகள், கொண்டு செல்லப்படும் இடம் வரை, கண்காணிக்க முடியும். இவற்றின் உற்பத்தி விலை ரூ.400.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723127

-----(Release ID: 1723214) Visitor Counter : 96