புவி அறிவியல் அமைச்சகம்
தில்லி, ஹரியானா, சண்டிகரில் ஒரு சில இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
प्रविष्टि तिथि:
30 MAY 2021 2:55PM by PIB Chennai
தில்லி, ஹரியானா, சண்டிகரில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
பீகார், மேற்கு வங்கம், சிக்கிம், அசாம், மேகாலயா, கேரளா மற்றும் மாஹேவில் ஒரு சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்கள் பலவற்றில் ஒரு சில இடங்களில், இன்றும் நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசும் எனவும் வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துளளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1722890
----
(रिलीज़ आईडी: 1722960)
आगंतुक पटल : 196