வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

புரதம், நார் சத்து மிகுந்த ‘கிராமத்து அரிசி’, தமிழகத்திலிருந்து, கானா, ஏமனுக்கு ஏற்றுமதி

Posted On: 29 MAY 2021 4:42PM by PIB Chennai

இந்தியாவில் பாசுமதி அல்லாத அரிசியின் ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகளை ஊக்குவிக்கும் வகையில் கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட 4.5 மெட்ரிக் டன் 'கிராம அரிசியை' உதயா வேளாண் பண்ணை என்ற புதுமை நிறுவனம் விமானம் மற்றும் கப்பல் வழியாக  கானாவிற்கும், ஏமனுக்கும் இன்று ஏற்றுமதி செய்தது.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூரில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கப்படும்கிராம அரிசியில்', புரதம், நார் மற்றும் ஏராளமான தாதுக்கள் நிறைந்துள்ளன. வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான அபெடா, வரும் மாதங்களில் இந்த அரிசியின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான உதவிகளை உதயா வேளாண் பண்ணைக்கு அளித்து வருகிறது.

2021-21 ஆம் ஆண்டில் பாசுமதி அல்லாத அரிசியின் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க உயர்வை எட்டியது. 2020 ஏப்ரல்-மார்ச் மாதத்தில் ரூ. 14,400 கோடியாக இருந்த ஏற்றுமதி, 2021 ஏப்ரல்-மார்ச் மாதத்தில் ரூ. 35,448 கோடியாக அதிகரித்து, 146% வளர்ச்சியை அடைந்தது.

முன்னதாக இம்மாதத் துவக்கத்தில் ஒடிசா மாநிலத்தின் பாரதீப் சர்வதேச சரக்கு முனையத்திலிருந்து வியட்நாமிற்கு முதல் முறையாக பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் அசாமில் இருந்து முதல் முறையாக சிகப்பு அரிசி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. எந்தவிதமான ரசாயன உரங்களின் பயன்பாடும் இல்லாமல் அசாமின் பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கில் இரும்பு சக்தி மிகுந்த சிகப்பு அரிசி விளைவிக்கப்படுகிறது.

இந்தியாவின் பாசுமதி அல்லாத அரிசியின் ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும் வகையில் விவசாயிகள், தொழில்முனைவோர், ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுடன் அபெடா இணைந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1722695

                                                                              -----



(Release ID: 1722770) Visitor Counter : 250


Read this release in: English , Urdu , Hindi , Punjabi