புவி அறிவியல் அமைச்சகம்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது யாஸ் புயல்

प्रविष्टि तिथि: 28 MAY 2021 7:14PM by PIB Chennai

ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடந்த யாஸ் புயல் வலுவிழந்து மத்திய ஜார்கண்ட் பகுதியில் நேற்று காற்றழுத்தமாக மையம் கொண்டிருந்தது. அது வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி பீகார் மற்றும் அதையொட்டியுள்ள கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் மையம் கொண்டுள்ளது.  இது வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மிக குறைந்த காற்றழுத்தமாக மாறும்.

இதன் காரணமாக மேற்கு வங்கம், சிக்கிம்உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில்   இன்றும், கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் இன்றும், நாளையும்  ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1722538

*****************

 


(रिलीज़ आईडी: 1722561) आगंतुक पटल : 196
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी