பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
தனது மக்களவை தொகுதியான உதம்பூர்-கத்துவா-தோடாவில், கொவிட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் பொருட்களை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அனுப்பி வைத்தார்
प्रविष्टि तिथि:
28 MAY 2021 6:34PM by PIB Chennai
தனது மக்களவை தொகுதியான உதம்பூர்-கத்துவா-தோடாவில் உள்ள கொவிட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் பொருட்களை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று அனுப்பி வைத்தார்
அரிசி, தானியங்கள், பருப்புகள் உள்ளிட்டவற்றை தனித்தனி பொட்டலங்களாக கொண்ட இந்த ரேஷன் பொருட்கள், சுமார் கடந்த ஒரு மாதமாக ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளுக்கு டாக்டர் ஜிதேந்திர சிங் அனுப்பிவரும் உதவிகளின் ஒரு பகுதியாகும்.
முகக்கவசங்கள், கிருமி நாசினிகள் மற்றும் இதர பொருட்களை தாம் இதற்கு முன்னர் அனுப்பி வைத்ததை அமைச்சர் நினைவு கூர்ந்தார். தனது மக்களவைத் தொகுதியில் உள்ள 6 மாவட்டங்களை தவிர ஜம்முவின் இதர பகுதிகளுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தாம் அனுப்பி வைத்த கொவிட் தொடர்பான பொருட்களை உற்சாகத்துடன் மக்கள் பெற்றுக்கொண்டதாக அவர் திருப்தி தெரிவித்தார்.
வேற்றுமைகளை மறந்து, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கொவிட்டை எதிர்த்து ஒற்றுமையுடன் போராடுமாறு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளின் மூத்த தலைவர்களுக்கு டாக்டர் ஜிதேந்திர சிங் மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுத்தார். இந்த பேரிடர் நேரத்தில், மனித குலத்தின் நன்மைக்காக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
*****************
(रिलीज़ आईडी: 1722539)
आगंतुक पटल : 199