வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

135 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கை தொய்வின்றி நடைபெற்று வருவதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தகவல்

Posted On: 26 MAY 2021 5:42PM by PIB Chennai

இந்தியாவின் தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கை ஈடு இணை இல்லாதது என்றும் 135 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பன்முகத்தன்மை உடைய நாட்டில் தடுப்பூசி செலுத்தும் செயல்பாடு தொய்வின்றி நடைபெற்று வருவதாகவும் வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான திரு ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

ஜம்மு காஷ்மீரில் மட்டும், 45 வயதுக்கு மேற்பட்டோரில் சுமார் 66 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

சன்சத்/ராஜ்ய சபா  தொலைக்காட்சிக்கு பிரத்தியேக பேட்டி அளித்த டாக்டர் ஜிதேந்திர சிங், 100 மில்லியன் டோஸ்கள் தடுப்பு மருந்தை வேகமாக வழங்கிய நாடும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்திய நாடும் இந்தியா தான்  என்று கூறினார். இதை அரசியலாக்குவதை விட்டுவிட்டு இந்தியாவின் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையை ஒரு மக்கள் இயக்கமாக நாம் அனைவரும் மாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தடுப்பூசியை போட்டுக்கொள்வதற்கு மக்களிடையே தொடக்கத்தில் இருந்த தயக்கம் தற்போது இல்லை என்று அமைச்சர் தெரிவித்தார். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தகுதியுடைய வயதினர் தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்வதற்காக

அதிக அளவில் முன் வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். பெருந்தொற்றின் இரண்டாவது அலை தகுதியுடைய அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளதாக அவர் கூறினார்.

வடகிழக்கு பிராந்தியத்திலுளள

பல்வேறு இடங்களில் 8 ஆக்சிஜன் ஆலைகளை நிறுவ ஜப்பான் மற்றும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் முன்வந்திருப்பதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். வடகிழக்கு பகுதியில் உள்ள 71 லட்சத்திற்கும் அதிகமானோர் ஏற்கனவே தடுப்பு மருந்து பெற்றிருப்பதாகவும், இதில் அதிகமானோர் அசாமில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721921

------


(Release ID: 1721942) Visitor Counter : 217