புவி அறிவியல் அமைச்சகம்

யாஸ் புயல் வடக்கு ஒடிசா-மேற்கு வங்கம் இடையே இன்று மதியம் கரைகடக்கிறது

प्रविष्टि तिथि: 26 MAY 2021 8:53AM by PIB Chennai

யாஸ் அதி தீவிர புயல் வடக்கு ஒடிசா -மேற்கு வங்கம் இடையே பாரதீப் மற்றும் சாகர் தீவுகள் இடையே இன்று மதியம் கரைகடக்கிறது என்றும் அப்போது மணிக்கு 130 முதல் 155 கிமீ வேகத்தில் காற்று வீசலாம் என தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

யாஸ் புயல் இன்று காலை 4.30 மணியளவில், வடமேற்கு வங்க கடல் பகுதியில் தம்ரா என்ற இடத்துக்கு கிழக்கு 60 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது. இது இன்று மதியம் வடக்கு ஒடிசா-மேற்குவங்கம் கடற்கரை இடையே பாரதீப் மற்றும் சாகர் தீவு பகுதியில் தம்ரா என்ற இடத்துக்கு வடக்கே இன்று மதியம் கரை கடக்கிறது. அப்போது மணிக்கு 130 முதல் 155 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட்டில் இன்றும், நாளையும் மிதமானது முதல் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் பல இடங்களில் இன்று மிதமானது முதல் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலசூர் பகுதியில் 2 முதல் 4 மீட்டர் உயரத்துக்கு கடல் அலை எழும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா, மேற்கு வங்கம் கடலோர பகுதியில் இன்று காலை 80 முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசியது.

இன்று காலை 8.30 மணி வரை ஒடிசாவின் பாரதீப் பகுதியில் அதிகபட்சமாக 17.4 செ.மீ மழை பெய்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1721784&RegID=3&LID=1

------


(रिलीज़ आईडी: 1721862) आगंतुक पटल : 247
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी