பாதுகாப்பு அமைச்சகம்

யாஸ் புயல்: மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக இந்திய கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன

Posted On: 22 MAY 2021 5:58PM by PIB Chennai

வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் யாஸ் எனும் புயலாக உருவாகி, அடுத்த 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடா மீது வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே மே 26 அன்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், புயலின் அசைவுகளை இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

யாஸ் புயலை எதிர்கொள்வதற்காக கிழக்கு கடற்படை தள தலைமையகம் மற்றும் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா பகுதிகளின் கடற்படை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து இருப்பதோடு மாநில அரசுகளுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக அவர்களோடு தொடர்பில் உள்ளனர்.

தயார் நிலையில் ஒரு பகுதியாக, எட்டு வெள்ள நிவாரண குழுக்கள் மற்றும் நான்கு நீச்சல் குழுக்கள் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் தயார் நிலையில் உள்ளன. நான்கு கடற்படை கப்பல்கள், மருத்துவ குழுக்கள் மற்றும் இதர குழுவினர் தேவையான உதவிகளை அளிப்பதற்காக ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையோரப் பகுதிகளில் தயார் நிலையில் உள்ளனர்.

மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை வான்வழியாக ஆய்வு செய்வதற்காகவும், பாதிக்கப்பட்டுள்ள நபர்களை மீட்பதற்காகவும், தேவையான நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காகவும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐஎன்எஸ் டேகா மற்றும் சென்னைக்கு அருகிலுள்ள ஐஎன்எஸ் ராஜாளி ஆகிய கடற்படைக்கு சொந்தமான விமான நிலையங்களில் கடற்படை விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

  *****************



(Release ID: 1720973) Visitor Counter : 242


Read this release in: Urdu , English , Hindi , Punjabi , Odia