எரிசக்தி அமைச்சகம்

பவர்கிரிட் நிறுவனத்தில் தடுப்பு மருந்து வழங்கல் தொடர்ந்து நடைபெறுகிறது

Posted On: 21 MAY 2021 6:00PM by PIB Chennai

மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான பவர்கிரிட், தனது பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை கொவிட்-19 பெருந்தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக தடுப்பு மருந்து வழங்குதல் முகாம்களை  நாடு முழுவதும் அதிக அளவில் நடத்தி வருகிறது.

தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாக நிறுவனத்தின் அனைத்து மையங்களிலும் தடுப்பு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பாட்னாவில் உள்ள மண்டல தலைமையகத்தில் 2021 மே 19- 20 ஆகிய தேதிகளில்  தடுப்பு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. பாட்னா மண்டல தலைமையகத்தின் பணியாளர்கள், பாட்னா துணை மின்நிலையத்தின் பணியாளர்கள் மற்றும் பீகார் கிரிட் கம்பெனி லிமிடெட் பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டது. பாட்னா மாவட்ட தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பணியாளர்கள், அவர்களை சார்ந்துள்ளவர்கள், குடும்பத்தினர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என 350-க்கும் அதிகமானோர் பவர் கிரிட்டின் கிழக்கு மண்டலம் 1-ல் நடைபெற்ற இந்த மிகப்பெரிய தடுப்பு மருந்து வழங்கும் முகாம் மூலம் பயன் பெற்றனர்.

*****************



(Release ID: 1720729) Visitor Counter : 152


Read this release in: English , Urdu , Hindi , Punjabi