புவி அறிவியல் அமைச்சகம்

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மிகக் கன மழையும், ஆந்திரக் கடலோரப் பகுதிகள், ஏனாம், ராயலசீமா, கடலோர & தெற்கு உள் கர்நாடகம், கேரளா & மாஹி ஆகியப் பகுதிகளில் கன மழையும் இன்று ( மே, 21 ) பெய்யக்கூடும்

प्रविष्टि तिथि: 21 MAY 2021 9:50AM by PIB Chennai

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மிகக் கன மழையும், ஆந்திரக் கடலோரப் பகுதிகள், ஏனாம், ராயலசீமா, கடலோர மற்றும் தெற்கு உள் கர்நாடகம், கேரளா & மாஹி ஆகிய பகுதிகளில் கன மழையும் இன்று (மே, 21 ) பெய்யக்கூடும்.

இது தொடர்பாக இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் பகுதியில் இன்று தொடங்கும். இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், லட்சத் தீவுகள் ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

மேலும் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இந்த நாட்களில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1720492

•••••••••••••••


(रिलीज़ आईडी: 1720580) आगंतुक पटल : 213
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , हिन्दी , Bengali , English