புவி அறிவியல் அமைச்சகம்

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

Posted On: 20 MAY 2021 12:02PM by PIB Chennai

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் விடுத்துள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பின்படி, மே 20 அன்று இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், ஜார்கண்ட், அசாம், மேகாலயா, மேற்கு வங்க கங்கைக் கரையோரப் பகுதி, கேரளா மற்றும் லட்சத்தீவுகளின் ஒரு சில இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில்) மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடற்கரை மற்றும் தெற்கு உள் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள், யானம், கோவா கொங்கன், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், விதர்பா, சத்தீஸ்கர், பிகார், மேற்கு வங்கத்தில் உள்ள இமாலயப் பகுதி, சிக்கிம், அந்தமான் நிக்கோபார் தீவுகள், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மிசோரம் மற்றும் திரிபுராவின் ஒரு சில இடங்களில் மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.

உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள இமாலயப் பகுதி மற்றும் சிக்கிமின் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், மேற்கு உத்தரப் பிரதேசம், அசாம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1720179

*****************


(Release ID: 1720247) Visitor Counter : 127