புவி அறிவியல் அமைச்சகம்
தென்மேற்கு பருவமழை நாளைத் தொடங்க வாய்ப்பு
Posted On:
20 MAY 2021 10:27AM by PIB Chennai
கிழக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு மத்திய பிரதேசத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, மேலும் வலுவிழந்து இன்று (மே 20, 2021) காலை 5:30 மணி அளவில் வடமேற்கு மத்திய பிரதேசம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலை கொண்டிருந்ததாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது, வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் படிப்படியாக வலுவிழக்கக்கூடும். அடுத்த 24 மணிநேரத்தில் இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, உத்தரப்பிரதேசத்தை நோக்கி வடகிழக்கு திசையில் செல்லக்கூடும்.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலை ஒட்டியுள்ள பகுதியில் தென்மேற்கு பருவமழை மே 21-ஆம் தேதி அளவில் தொடங்கக்கூடும்.
மத்திய அசாமில் கடல் மட்டத்திலிருந்து 0.9 கிலோமீட்டர் உயரத்திலும், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து 3.1 கிலோமீட்டர் முதல் 5.8 கிலோமீட்டர் உயரத்திலும் சூறாவளி சுழற்சி தொடர்கிறது. வடக்கு அந்தமான் கடல் மற்றும் கிழக்கு மத்திய வங்ககடலில் மே 22 அன்று ஓர் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.
வானிலை குறித்த கூடுதல் தகவல்களுக்கு http://www.imd.gov.in/ என்ற இணையதளத்தையோ அல்லது +91 11 24631913, 24643965, 24629798 ஆகிய தொலைபேசி எண்களையோ தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1720154
***********************
(Release ID: 1720240)
Visitor Counter : 158