புவி அறிவியல் அமைச்சகம்

தெற்கு ராஜஸ்தான் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்தமாக மாறியது “டவ்-தே” புயல்

Posted On: 19 MAY 2021 1:23PM by PIB Chennai

தெற்கு ராஜஸ்தான் மற்றும் அதை ஒட்டியுள்ள குஜராத் பகுதிகளில காற்றழுத்தமாக மாறியுள்ளடவ்-தேபுயல், கடந்த 6 மணி நேரங்களில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து இன்று (மே 19, 2021) காலை 8:30 மணி அளவில் தென் கிழக்கு ராஜஸ்தான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், உதய்பூரிலிருந்து (ராஜஸ்தான்) 30 கிலோமீட்டர் தெற்கு- தென் மேற்கு பகுதியிலும், குஜராத் மாநிலத்தின் தீசா பகுதியிலிருந்து 170 கிலோமீட்டர் கிழக்கு வடகிழக்கு திசையிலும்   நிலை கொண்டிருந்தது

இது வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக கிழக்கு ராஜஸ்தானில் இன்று ஒரு சில இடங்களில் பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். மேலும் அடுத்த 24 மணி நேரத்தில்  உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒருசில பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேசம், உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த முதல் மிக பலத்த மழையும், பஞ்சாப், கிழக்கு உத்தரப் பிரதேசம், வடக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு ராஜஸ்தானில் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719861

 

-----

 



(Release ID: 1719923) Visitor Counter : 169


Read this release in: English , Urdu , Hindi , Punjabi