புவி அறிவியல் அமைச்சகம்
டவ்-தே புயல் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தமாக மாறும்
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAY 2021 8:57AM by PIB Chennai
ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறியுள்ள ‘‘டவ்-தே’’ புயல் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில், குறைந்த காற்றழுத்தமாக மாறும் வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம், இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
குஜராத் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறியுள்ள டவ்-தே புயல் கடந்த 6 மணி நேரத்தில் வடகிழக்கு திசை நோக்கி மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று காலை 5.30 மணியளவில் தெற்கு ராஜஸ்தான் மற்றும் அதனையொட்டியுள்ள குஜராத் பகுதியில், உதய்பூருக்கு (ராஜஸ்தான்) தென்மேற்கே 60 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வுநிலையாக மையம் கொண்டுள்ளது. இது வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையாக மாறும் வாய்ப்புள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?
-------
(வெளியீட்டு அடையாள எண்: 1719884)
வருகையாளர் எண்ணிக்கை : 182