நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
கடந்த வருடத்தை விட 24 சதவீதம் அதிக கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
18 MAY 2021 6:51PM by PIB Chennai
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், தில்லி, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கோதுமை கொள்முதல் தொய்வின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 300.58 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டு இருந்த நிலையில் இந்த வருடம் மே 17 வரை, 373.51 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
ராபி சந்தைப்படுத்துதல் பருவத்தில் சுமார் 38.22 லட்சம் விவசாயிகள் ரூபாய் 73,768.74 கோடி மதிப்பிலான குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல் நடவடிக்கைகள் மூலம் ஏற்கனவே பலனடைந்துள்ளனர்.
மேலும், மாநிலங்களிலிருந்து வந்திருந்த கோரிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் 107.37 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் விதைகளை கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
2021 மே 17 வரை, 6,73,415.23 மெட்ரிக் டன் எடையிலான தானியங்களை ரூபாய் 3,527.48 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம், அரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள 4,02,627 விவசாயிகள் பயனடையும் வகையில் தனது முகமைகள் மூலம் அரசு கொள்முதல் செய்துள்ளது.
அதே போன்று, 5089 மெட்ரிக் டன் கொப்பரை கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 3961 விவசாயிகளிடம் இருந்து ரூபாய் 52.40 கோடி குறைந்தபட்ச ஆதார விலைக்கு 2021 மே 17 வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1719780)
வருகையாளர் எண்ணிக்கை : 218