கலாசாரத்துறை அமைச்சகம்
சர்வதேச அருங்காட்சியகங்கள் தினம் 2021-ஐ முன்னிட்டு விவாத நிகழ்ச்சிகளை கலாச்சார அமைச்சகம் நடத்தியது
प्रविष्टि तिथि:
18 MAY 2021 6:48PM by PIB Chennai
ஒவ்வொரு ஆண்டும் மே 18 அன்று சர்வதேச அருங்காட்சியகங்கள் தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச அருங்காட்சியகங்கள் குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த தினத்தின் நோக்கம் 'கலாச்சாரப் பரிமாற்றத்தின் முக்கிய அங்கமாக திகழும் அருங்காட்சியகங்கள்
குறித்த பரஸ்பர புரிதல், ஒத்துழைப்பு மற்றும் அமைதியை மக்களிடையே ஏற்படுத்துவது' ஆகும்.
2021-ம் ஆண்டின் சர்வதேச அருங்காட்சியகங்கள் தினத்தின் மையக்கரு "அருங்காட்சியகங்களின் எதிர்காலம்: மீட்பு மற்றும் மறு கற்பனை" ஆகும். இதையொட்டி, குறிப்பாக கொவிட் சர்வதேச பெருந்தொற்றை கருத்தில் கொண்டு கலாசாரத் துறையில் மாறி அமைந்துள்ள முன்னுரிமைகள் மற்றும் அருங்காட்சியகங்களின் பங்கு குறித்த விவாதங்களை இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் நடத்தியது.
இத்தகைய ஒரு விவாதத்தில் சிறப்புரையாற்றிய மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு பிரகலாத் சிங் பட்டேல், நமது கலாச்சார வளங்களை வெளிப்படுத்தவும் அதை மக்களிடையே கொண்டுசெல்லவும் இன்னும் அதிக அளவிலான கலாச்சார வெளிகளை நாம் உருவாக்க வேண்டும் என்று கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவும் கூட இது என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு https://pib.gov.in/ PressReleasePage.aspx?PRID =1719673
**
(रिलीज़ आईडी: 1719767)
आगंतुक पटल : 287