பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

மகாராஷ்டிராவில் உள்ள வன்தான் கேந்திரங்கள் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மாற்றியமைக்க உதவுகின்றன

Posted On: 17 MAY 2021 11:23AM by PIB Chennai

திறமைமிக்க தலைவர் ஒருவரின் கீழ் இயங்கும் அர்ப்பணிப்பு மிக்க சிறுவர்களின் குழு ஒன்று, அரசு அமைப்புகளின் ஆதரவைப் பெற்று மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் ஆச்சரியங்களை நிகழ்த்தி உள்ளது. அடிமட்ட பழங்குடி அமைப்பை சேர்ந்த இந்த சிறுவர்கள், கிலாய் எனும் மருத்துவ குணமிக்க தாவரத்திற்காக ரூ 1.57 கோடி மதிப்பிலான ஆர்டர்களைப் பெற்றுள்ளனர்.

டாபர், பைத்தியநாத் மற்றும் ஹிமாலய் உள்ளிட்ட பெரு நிறுவனங்களிடம் இருந்து இந்த குழுவிற்கு ஆர்டர்கள் கிடைத்துள்ளன. தானேவில் உள்ள ஷாஹாப்பூரில் இயங்கும் ஆதிவாசி ஏகாத்மிக் சன்ஸ்தா எனும் இந்த இளைஞர் அமைப்பு, அப்பகுதியில் உள்ள பழங்குடி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது.

குடிச்சி என்று ஆயுர்வேதத்தில் அழைக்கப்படும் கிலாய், வைரஸ் காய்ச்சல், மலேரியா மற்றும் நீரிழிவு நோய் உள்ளிட்டவற்றின் சிகிச்சையில் பயன்படுகிறது. பவுடர், கிரீம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் அது பயன்படுத்தப்படுகிறது.

காத்காரி சமூகத்தை சேர்ந்த 27 வயதான சுனில் பவார் எனும் இளைஞர் அவரது 10-12 நண்பர்களுடன் இணைந்து தங்களது சொந்த ஊரில் உள்ள வருவாய் அலுவலகங்களில் காத்காரி பழங்குடியினருக்கு உதவ ஆரம்பித்த போது இந்த குழுவின் பயணம் தொடங்கியது.

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் வகைப்பாட்டின் படி, 75 குறிப்பிட்ட பாதிப்புக்குள்ளாகக் கூடிய பழங்குடி இன குழுக்களில் ஒன்று தான் இந்த காத்காரி ஆகும். மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டிரைஃபெட் அமைப்பின் ஆதரவுடன் இயங்கி வரும் சுனில் தன்னை ஒரு திறமைவாய்ந்த தொழில்முனைவோர் என்று நிரூபித்துள்ளார். சுமார் 1800 பேரிடமிருந்து அவர் கிலாயை பெறுகிறார்.

"கொவிட் பொது முடக்கத்தின் போது கூட 1800 பழங்குடியின மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு தேவையான வருமானத்தை ஈட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது சுமார் ரூ 1.5 கோடி அளவுக்கு ஆர்டர்கள் உள்ளன. டாபரிடம் இருந்து இன்னும் பெரிய ஆர்டர் ஒன்று வரவிருக்கிறது," என்று பத்திரிகை தகவல் அலுவலகத்திடம் புன்னகையுடன் தெரிவிக்கிறார் சுனில் பவார்.

*****************



(Release ID: 1719362) Visitor Counter : 145


Read this release in: English , Urdu , Hindi , Marathi