புவி அறிவியல் அமைச்சகம்

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மே 18ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

प्रविष्टि तिथि: 14 MAY 2021 11:15AM by PIB Chennai

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், ஒரு சில இடங்களில் மே 18ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலைத் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு  மையம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

லட்சத்தீவு, கேரளா, மாஹே, கடலோர கர்நாடகாதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும்(மே 15) இடி, மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தென் கிழக்கு அரபிக்கடல் பகுதி மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு, மாலத்தீவு, அதனையொட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதி, கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில்  மணிக்கு 50 முதல் 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் வாய்ப்புள்ளது.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1718508

*****************


(रिलीज़ आईडी: 1718605) आगंतुक पटल : 199
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , हिन्दी , Kannada