பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஜம்மு காஷ்மீர் அரசு மருத்துவ கல்லூரிகளில் கொவிட் மேலாண்மை குறித்து மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் ஆய்வு
प्रविष्टि तिथि:
13 MAY 2021 5:53PM by PIB Chennai
ஜம்மு காஷ்மீர் அரசு மருத்துவ கல்லூரிகளில் கொவிட் மேலாண்மை குறித்து, மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மீது கூறப்பட்ட புகார் குறித்து, நேற்று அவசரக் கூட்டம் நடத்திய வடகிழக்கு பகுதி மேம்பாட்டுத்துறை அமைச்சர் இன்று ஜம்மு காஷ்மீரில் கதுவா, ராஜோரி மற்றும் தோடா மற்றும் ஸ்கிம்ஸ் மருத்துவமனைகளில் கொவிட் மேலாண்மை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதில் ஜம்மு அரசு மருத்துவ கல்லூரியில் ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர் தணிக்கை விவரங்களை அதன் முதல்வர் டாக்டர் சசி சுதன் சர்மா, அமைச்சர் ஜித்தேந்திர சிங்கிடம் தெரிவித்தார். இறுதியாண்டு படிக்கும் மருத்துவ மாணவர்களை, மருத்துவமனைகளில் பணியாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் விவரித்தார். பிரதமர் நல நிதியிலிருந்து பெறப்பட்ட வென்டிலேட்டர்கள் வந்து சேர்ந்துள்ளதாகவும், சில தொழில்நுட்ப பிரச்சனைகளை சரிசெய்தபின் அவைகள் விரைவில் பயன்படுத்தப்படும் எனவும் டாக்டர் சசி சுதன் சர்மா தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீருக்கு தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளதாகவும், டாக்டர் ஜித்தேந்திர சிங் உறுதி அளித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1718340
*****************
(रिलीज़ आईडी: 1718385)
आगंतुक पटल : 188