இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமது கனவு நனவாகக் காரணமாக இருந்த பெற்றோருக்கு இந்திய வாள் சண்டை வீராங்கனை திருமிகு பவானிதேவி நன்றி
Posted On:
13 MAY 2021 4:56PM by PIB Chennai
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள முதல் இந்திய வாள் சண்டை வீராங்கனையான திருமிகு பவானி தேவி, டோக்கியோ 2020 போட்டிகளில் தமது முழு திறனையும் வெளிப்படுத்த ஆவலுடன் இருப்பதாகக் கூறினார். “முதல் முறையாக நமது நாடு ஒலிம்பிக்கில் வாள் சண்டை போட்டிகளையும், எனது விளையாட்டையும் காணவிருப்பதால், அவர்களுக்கு முன் எனது சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவேன்”, என்று அவர் தெரிவித்தார்.
மார்ச் மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளுக்குப் பிறகு, சரிசெய்யப்பட்ட அதிகாரப்பூர்வமான தரவரிசையின் ஒதுக்கீடு வாயிலாக சென்னையைச் சேர்ந்த 27 வயது வீராங்கனை பவானி தேவி தேர்வு செய்யப்பட்டார்.
மூங்கில் கம்புகளினால் தமது பயிற்சியை அவர் முதலில் துவக்கினார்.
திருமிகு பவானி தேவியின் மறைந்த தந்தை அர்ச்சகராகப் பணியாற்றினார். அவரது தாய் இல்லத்தரசியாக உள்ளார். தமது ஒவ்வொரு முயற்சியின் போதும் பெற்றோர் தமக்கு அளித்த ஆதரவிற்கு திருமிகு பவானி தேவி மிகுந்த கடமைப்பட்டுள்ளார். “எனது பெற்றோரின் ஆதரவினால் மட்டுமே பல்வேறு சவால்களையும் கடந்து என்னால் முன்னேற முடிந்தது”, என்று இந்திய விளையாட்டு ஆணையம் புதன்கிழமையன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக கலந்துரையாடலின் போது அவர் கூறினார்.
2019-20 ஆம் ஆண்டில் ரூ. 16.94 கோடி நிதியை ஒதுக்கி இந்திய வாள் சண்டை சங்கத்திற்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஆதரவளித்தது. தற்போது திருமிகு பவானி தேவியின் பயிற்சி கட்டணத்திற்கு ஒலிம்பிக் போட்டிகள் வரையிலும் சிறந்த உபகரணங்கள் வாங்குவதற்காக மொத்தம் ரூ.19.28 லட்சத்தை மிஷன் ஒலிம்பிக் செல் ஒதுக்கியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1718316
*****************
(Release ID: 1718353)
Visitor Counter : 187