குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ரம்ஜானை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

Posted On: 13 MAY 2021 3:33PM by PIB Chennai

ரம்ஜான் பண்டிகைநாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு, குடியரசு துணைத் தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

‘‘மகிழ்ச்சியான ரம்ஜான் நிகழ்ச்சியை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ரம்ஜான் புனித மாதத்தின் நிறைவை ரம்ஜான் பண்டிகை குறிக்கிறது மற்றும் சகோதரத்துவம், சமூக ஒற்றுமையின் அடையாளமாகவும் உள்ளது. நமது வாழ்வில்  இரக்கம், தொண்டு மற்றும் பெருந்தன்மை ஆகியவற்றின் உணர்வு மற்றும் முக்கியத்துவத்தை இந்த பண்டிகை மீண்டும் உறுதிபடுத்துகிறது.

நமது நாட்டில் பண்டிகைகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஒன்று கூடி கொண்டாடும் நிகழ்வாக  எப்போதும் உள்ளது. ஆனால், தற்போதைய கொவிட்-19 தொற்று சூழலால், இந்த பண்டிகையை, கொவிட் சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி கொண்டாட வேண்டும் என நாட்டு மக்களுக்கு நான் வலியுறுத்துகிறேன்.

ரம்ஜானுடன் தொடர்புடைய உன்னத குறிக்கோள்கள், நமது வாழ்வில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மனிதநேயத்தை வளப்படுத்தட்டும்.’’

*****************


(Release ID: 1718310)