நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
கோதுமை பயிரின் விற்பனைக்காக பஞ்சாப் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு ஏற்கனவே நேரடியாக ரூபாய் 22,215.93 கோடி செலுத்தப்பட்டு விட்டது
Posted On:
11 MAY 2021 5:39PM by PIB Chennai
அவர்களது கோதுமை பயிரின் விற்பனைக்காக பஞ்சாப் விவசாயிகள் தங்களது வங்கி கணக்குகளில் முதல் முறையாக நேரடியாக பணத்தை பெறத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே நேரடியாக ரூபாய் 22,215.93 கோடி செலுத்தப்பட்டு விட்டது
தற்போதைய ராபி சந்தைப்படுத்துதல் 2021-22 பருவத்தில், ஏற்கனவே உள்ள விலை ஆதரவு திட்டத்தின் படி விவசாயிகளிடம் இருந்து பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலை இந்திய அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.
பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் இதர மாநிலங்களில் கோதுமை கொள்முதல் தொடர்ந்து சுமுகமாக நடந்து வருகிறது. 2021 மே 10 வரை
341.77 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே சமயத்தில் இது 252.50 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது.
341.77 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையில் பஞ்சாபின் பங்களிப்பு 129.35 லட்சம் மெட்ரிக் டன் (37.84%) ஆகும். ஹரியானா 80.80 லட்சம் மெட்ரிக் டன் (23.64%) மற்றும் மத்திய பிரதேசம் -97.54 லட்சம் மெட்ரிக் டன் (28.53%). இது 2021 மே 10 வரையிலான நிலவரம் ஆகும்.
தற்போது நடைபெற்று வரும் கொள்முதல் நடவடிக்கைகளின் காரணமாக சுமார் 34.57 லட்சம் கோதுமை விவசாயிகள் ஏற்கனவே பயனடைந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717720
------
(Release ID: 1717805)
Visitor Counter : 242