உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

மருத்துவப் பொருட்களை தாமதமின்றி விநியோகித்த ராஞ்சி விமான நிலையம்

Posted On: 10 MAY 2021 6:01PM by PIB Chennai

கொவிட்டுக்கு எதிரான போரில் ராஞ்சி விமான நிலையமும் தனது பங்களிப்பை அளித்து வருகிறது

ஆக்ஸிஜன் டேங்கர்கள், செறிவூட்டிகள், தடுப்பூசிகள், கொவிட் பரிசோதனை உபகரணங்கள், கொவிட் நிவாரண மருத்துவ பொருட்களை, தாமதமின்றி விநியோகிப்பதில் ராஞ்சி விமான நிலையம் உதவி வருகிறது

 நாடு சந்தித்த ஆக்ஸிஜன் நெருக்கடியை எதிர்கொள்ளும் பணி  ராஞ்சி பிர்ஸா முண்டா விமான நிலையத்தில் ஏப்ரல் 24ம் தேதி தொடங்கியது. கடந்த மே 8ம் தேதி வரை, இந்திய விமானப்படையின் 100 விமானங்களில், 139 ஆக்ஸிஜன் டேங்கர்கள் கொண்டுவரப்பட்டன

  • விமானப்படையின் சி-17, சி 130 ஜே, ஏஎன் 32, ஐஎல் 76 மற்றும் இதர சிறிய விமானங்கள் கொவிட் நிவாரண பொருட்கள் கொண்டு செல்வதில் உதவி வருகின்றன. இந்த பொருட்களை தாமதமின்றி விநியோகிப்பதில் ராஞ்சி விமான நிலையம் முழுவீச்சில் செயல்படுகிறது.

மேலும், கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை, எலக்ட்ரானிக் அறிவிப்பு பலகைகள் மூலம் தெரிவிக்கப்படுகின்றன. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, கொவிட் தடுப்பு  நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இந்த பிரசாரத்தின் நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717474

----


(Release ID: 1717541) Visitor Counter : 280


Read this release in: English , Urdu , Hindi , Telugu