விவசாயத்துறை அமைச்சகம்
நிலுவையில் இருந்த 1,278 மானிய விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்து தேசிய தோட்டக்கலை வாரியம் சாதனை படைத்துள்ளது
Posted On:
10 MAY 2021 5:48PM by PIB Chennai
வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி பெற்ற அமைப்பான தேசிய தோட்டக்கலை வாரியம், நிலுவையில் இருந்த 1,278 மானிய விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்து சாதனை படைத்துள்ளது.
விளைச்சலுக்கு பிந்தைய ஊக்குவிப்பு மற்றும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள குளிர்பதன சங்கிலி உள்கட்டமைப்பு ஆகியவை உள்ளிட்ட நாட்டில் உயர் தொழில்நுட்ப வணிக தோட்டக்கலையின் ஒருங்கிணைந்த
வளர்ச்சிக்கான மானியங்களுக்கான விண்ணப்பங்கள் இவையாகும்.
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சரும் தேசிய தோட்டக்கலை வாரிய தலைவருமான திரு நரேந்திர சிங் தோமரின் தலைமையின் கீழ் தேசிய தோட்டக்கலை வாரியக் குழு தீவிரமாக பணியாற்றி இந்த பாராட்டுக்குரிய செயலை செய்துள்ளது.
பின்கள மூலதன முதலீட்டு மானிய திட்டங்களை வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகத்தின் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்துடன் இணைத்து, மூன்று சதவீத வட்டி கழிவுடன் கூடிய கடன் உத்திரவாத வசதியுள்ள ரூபாய் 2 கோடி வரையிலான கடனை விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் பெற தேசிய தோட்டக்கலை வாரியம் ஊக்கமளித்து வருகிறது. இதன்மூலம் அறுவடைக்கு பிந்தைய மற்றும் குளிர்பதன சங்கிலி உள்கட்டமைப்பை தோட்டக்கலை துறையில் நிறுவ முடியும்.
தேசிய தோட்டக்கலை வாரியத்தின் நிதி உதவியுடன் கூடுதலாக 2210 ஏக்கர்கள் உயர் தொழில்நுட்ப வணிகங்கள் தோட்டக்கலையில் வந்துள்ளன. மேலும் 1.15 லட்சம் மெட்ரிக் டன் திறனுள்ள குளிர்பதன சேமிப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
***
(Release ID: 1717534)
Visitor Counter : 220