ஜல்சக்தி அமைச்சகம்
ஜல் ஜீவன் இயக்கம்: ஆண்டு செயல் திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
Posted On:
08 MAY 2021 4:15PM by PIB Chennai
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், நிதியாண்டு 2021-22-இல் செயல்படுத்த உள்ள திட்டங்கள் அடங்கிய ஜல் ஜீவன் இயக்க ஆண்டு செயல் திட்ட அறிக்கையை (2021-22) காணொலிக் காட்சி வாயிலாக சமர்ப்பித்தது. உலக தண்ணீர் தினமான மார்ச் 22 அன்று, அனைத்து ஊரக வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்கி, கோவா, தெலங்கானாவை தொடர்ந்து நாட்டிலேயே மூன்றாவது மாநிலம்/ யூனியன் பிரதேசமாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் சாதனைப் படைத்தது.
100% இலக்கை இந்த யூனியன் பிரதேசம் அடைந்ததனால், ஒவ்வொரு வீட்டிற்கும் முறையாக மற்றும் நீண்ட நாட்களுக்கு தடையற்ற குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்வது மிகவும் அவசியமாகிறது.
எனவே ‘சேவை விநியோகத்தில்’, இந்த யூனியன் பிரதேசம் தற்போது கவனம் செலுத்துகிறது.
திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள 266 கிராமங்களில், விநியோக நிலைத்தன்மையில் கவனம் செலுத்தவிருப்பதாக ஆண்டு செயல் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021-22 ஆம் ஆண்டில் ஊரக வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற மிகப்பெரிய அளவிலான முதலீடு, ஊரக பொருளாதாரத்தை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவும், ஊரக இந்தியாவிற்கு வரப்பிரசாதமாகவும் அமையும்.
2024-ஆம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பை வழங்க ஜல் ஜீவன் இயக்கம் திட்டமிட்டுள்ள நிலையில், கடந்த 19 மாதங்களில் கொவிட் பெருந்தொற்று காலகட்டத்திலும் 4.17 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு புதிதாக குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக நாட்டில் சுமார் 7.40 கோடி (38.6%) வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717018
------
(Release ID: 1717081)
Visitor Counter : 288