பாதுகாப்பு அமைச்சகம்
ஒடிசாவில் 150 படுக்கைகளுடன் கொவிட் சிகிச்சை மையத்தை அமைத்தது கடற்படை
Posted On:
07 MAY 2021 7:33PM by PIB Chennai
கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, ஒடிசா மாநிலம் குர்தா மாவட்டத்தில் உள்ள கடற்படையின் பயிற்சித் தளம் ஐஎன்எஸ் சில்காவில், கொவிட் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இதை குர்தா மாவட்ட ஆட்சியர் திரு எஸ்.கே.மொகந்தி இன்று தொடங்கி வைத்தார். இந்தத் தனிமை மையத்தில் 150 படுக்கை வசதிகள் உள்ளன. இங்குள்ள கடற்படை மருத்துவமனை ஐஎன்எச்எஸ் நிவாரணியில் ஆக்ஸிஜன் வசதியுடன் 15 படுக்கைகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குர்தா மாவட்ட மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், இந்த மையத்தில் உள்ள கடற்படைக் குழுவினருடன் இணைந்து 24 மணி நேரமும் சிகிச்சை அளிப்பர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியக் கடற்படை முக்கியமான பங்காற்றி உதவுவதைப் பாராட்டினார். இந்த மையம் கொவிட் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிப்பதோடு மட்டும் அல்லாமல், அவர்களின் நம்பிக்கையையும் அதிகரிக்கும் என்றார். ராணுவம், பொதுமக்களுடன் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு இது மிகச் சிறந்த உதாரணம் என்றும் கொவிட் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சரியான நேரத்தில் செய்யும் உதவி எனவும் மாவட்ட ஆட்சியர் திரு எஸ்.கே.மொகந்தி குறிப்பிட்டார்.
*****************
(Release ID: 1716931)
Visitor Counter : 197